சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு, மும்பைக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், காலை 9.45 மணிக்கு, டெல்லிக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், காலை 10.10 மணிக்கு தூத்துக்குடி செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம், இன்று இரவு 8.40 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், ஆகிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் ஐதராபாத்தில் இருந்து இன்று அதிகாலை 1.40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஜெட் ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து காலை 9.05 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம், தூத்துக்குடியில் இருந்து பகல் 1.45 மணிக்கு, சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், இன்று இரவு 7.10 மணிக்கு, டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் ஆகிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 5 விமானங்கள், ஏர் இந்தியா விமானங்கள், 3 விமானங்கள், ஸ்பைஜெட் விமானங்கள் ஆகும். இந்த விமானங்கள் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யபபட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply