தமிழ்நாட்டில் தங்கம் விலை இன்று அதிரடியாக இருமுறை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சர்வதேச பொருளாதார நிலவர மாற்றங்களின் காரணமாக தொடர்ச்சியாக சரிவடைந்து வருகிறது.
இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.11,700-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.93,600-க்கும் விற்பனையானது.
ஆனால், மாலை நேரத்தில் தங்கம் விலை மேலும் குறைந்து, ஒரே நாளில் இரண்டாவது முறையாக சரிந்தது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இதனுடன் சரிவடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.175, கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து பார் வெள்ளி ரூ.1,80,000-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச தங்க விலை மாற்றம், டாலர் மதிப்பு, மற்றும் வட்டி விகித மாற்றங்கள் போன்றவை தங்க விலையில் இதுபோன்ற அதிரடி ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.



Leave a Reply