,

ஒரு நாள் தடைக்கு உட்பட்ட 23 வகை நாய்கள்

Rottweiler
Spread the love

(சந்தியா ந, தீபா ர)

23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு அடுத்த நாளே அந்த உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.
சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையான இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல் சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்த நீலா, சுரேஷ் என்ற தம்பதி நடைபயிற்சியின் போது, அதே பகுதியை சேர்ந்தவரின் வளர்ப்பு நாய் ஒன்று இருவரையும் கடித்தது.
தமிழ்நாட்டில் தெரு நாய்கள் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களின் தொந்தரவுகளால் பொதுமக்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடைவிதிப்பதாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மே 9-ம் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நாய் வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களுக்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசின் அறிவிப்பாணையை கொண்டு உத்தரவிட்டுள்ளது.
கலப்பற்ற நாய் இனங்களான,டெரியர், பிட்புல் டெரியர்,ஸ்டபோர்டுஷையர் டெரியர்,ஜாப்னிஸ் தோசா, தோசா இனு, அமெரிக்கன், பிலா ப்ரேசிலேரியா, டோகோ அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக்,அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ்,, ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் நாய் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி,‌ இனப்பெருக்கம் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் என நாய் வளர்ப்பார்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறிய நிலையில், மே 10 ஆம் தேதி மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்றதின் தடை உத்தரவு உள்ளதால் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பிறப்பித்த உத்தரவான 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தற்போது திரும்ப பெற்றுள்ளது.
இருப்பினும், பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது, நாய்களுக்கு கட்டாயம் முககவசம் மற்றும் சங்கிலி, ஆகியவற்றை அணிவித்து அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் ,அந்த சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு குறைந்தபட்சம் 3 மடங்கு நீளமாக இருக்க வேண்டும்.நல்ல தரமான கழுத்துப்பட்டையை அணிவித்து தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, பொதுமக்களுக்கும், செல்லப் பிராணகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.