ஜூலை 14 ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான டிபிஆர் (கட்டம் 1) இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும், கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கான நிதி தொடர்பான விஷயங்கள் டிபிஆர் இன் ஒப்புதல். பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான டிபிஆருக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளாரா, இந்த திட்டத்திற்கு ரூ.9000 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதா என்றும், திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி எப்போது தொடங்கும் என்றும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை கோரி கோயம்புத்தூரை சேர்ந்த வி.பாலசுப்ரமணியன் என்பவர் சமீபத்தில் ஆர்டிஐ மனு ஒன்றை தாக்கல் செய்து கேட்டறிந்தார்.
பாலசுப்ரமணியன் கேள்விகளுக்கு பதிலளித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டிபிஆர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும், ஒப்புதலுக்குப் பிறகு நிதி தொடர்பான விஷயங்கள் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிதியமைச்சகம் மற்றும் தமிழக அரசின் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையின் பரிசீலனையில் உள்ளதாக, நவமபர்.2023ல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சிஎம்ஆர்எல்) நிர்வாக இயக்குநர் சித்திக் கூறியது குறிப்பிடத்தக்கது. திட்டங்களுக்கு நிதியளிக்கும் வங்கி இறுதி செய்யப்பட்டு நிதி ஒப்படைக்கப்பட்டதும் இந்தத் திட்டங்களுக்கான பணிகளைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது
தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு பங்களிக்குமா, இருந்தால் எவ்வளவு என்பது பற்றிய தெளிவான குறிப்பு எதுவும் இல்லை.
ஒப்புதலுக்காக காத்திருக்கும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம்

Leave a Reply