கோவை செல்வபுரம் பகுதி 78வது டிவிஷனில் உள்ள ஐயுடிபி காலனிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து ஐயுடிபி காலனியில் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அவைத் தலைவர் காட்டுத்துரை மற்றும் கோமதி காட்டுத்துரை ஆகியோர் முன்னிலையில், செல்வபுரம் பகுதி செயலாளர் கௌதமன் 78வது டிவிஷன் செயலாளர் ஜெயதேவன் காட்டுத்துரை ஏற்பாட்டில் பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஐயுடிபி காலனியில் சுற்றுச்சுவர் பணிகளை துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி



Leave a Reply