, , , ,

​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

spvelumani son wedding
Spread the love

அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். குறிப்பாக  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,  பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் ஆகியோர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.