, , , ,

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயம் நடத்தும் ‘சொல் தமிழா! சொல்!’ மாநில அளவிலான பேச்சுப் போட்டி

SRM University
Spread the love

தமிழகமெங்கும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் மாநில அளவிலான பேச்சுப் போட்டியை எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் நடத்தவிருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கீழ்க்கண்டவாறு 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடைபெறும்.
1.   சென்னை மண்டலம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
2.   வேலூர் மண்டலம்: இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை
3.   கடலூர் மண்டலம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி மாநிலம்
4.   திருச்சி மண்டலம்: அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர்
5.  தஞ்சாவூர் மண்டலம்: நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை
6.   மதுரை மண்டலம்: சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர்
7.   நெல்லை மண்டலம்: தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி
8.   கோவை மண்டலம்: திருப்பூர், நீலகிரி
9.   சேலம் மண்டலம்: நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு.
போட்டிகள் நடைபெறும் நாட்களும் இடங்களும்
சென்னை மண்டலம்: 26.01.25 எஸ்.ஆர்.எம். – காட்டாங்குளத்தூர்- சென்னை
வேலூர் மண்டலம்: 02.02.25     தூய நெஞ்சக் கல்லூரி – திருப்பத்தூர்
கடலூர் மண்டலம்: 09.02.25     சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி – கடலூர்
திருச்சி மண்டலம்: 16.02.25      ஜமால் முகமது கல்லூரி – திருச்சி
தஞ்சாவூர் மண்டலம்: 23.02.25   பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி – தஞ்சாவூர்
மதுரை மண்டலம்: 02.03.25 தியாகராசர் கல்லூரி – மதுரை
நெல்லை மண்டலம்: 09.03.25    சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி
கோவை மண்டலம்: 16.03.25 பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  – கோவை
சேலம் மண்டலம்: 23.03.25 ஏ. வி. எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி – சேலம்
இந்த போட்டியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் வரை கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பயில்வோர் மட்டும் பங்கேற்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 25 வரை ஆகும்.
06.04.25 முற்பகலில் மாநில அளவிலான போட்டி நடைபெறும் மற்றும் பரிசுகள் அன்று மாலை வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்க https://forms.gle/jQPWBToWbzzsbVvz8 என்ற கூகுள் படிவ இணைப்பில் பதிவு செய்யலாம்.