தஞ்சாவூரில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உதவியாளரை தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மேடையில் பேச தயாராக இருந்தார். தனது உரையை ஆரம்பித்த அமைச்சர், “அனைவருக்கும் எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென்று திரும்பி, “பரசுராமன் எங்கே…” என்று கூறிவிட்டு, மேடைக்கு வந்த உதவியாளரை, பார்த்து எருமை மாடாடா நீ.. பேப்பர் எங்கே…” என்று ஆவேசமாக திட்டினார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது உதவியாளரை இழிவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply