இளங்கலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 2024- 25 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் படி 7.5 % இட ஒதுக்கீட்டின் கீழ் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர 2,721 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 495 எம்.பி.பி.எஸ் இடங்களும், 125 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாணவர் ரஜினிஷ் முதலிடம் பிடித்துள்ளார். 2ஆவது இடத்தை சென்னையை சேர்ந்த மாணவர் சையத் ஆரிபினும், மூன்றாவது இடத்தை சென்னையை சேர்ந்த மாணவி சைலஜாவும் பிடித்துள்ளனர். 4 ஆவது இடத்தை ஸ்ரீராம் என்கிற மாணவரும், 5 ஆவது இடத்தை ஜெயந்தி பூர்வதா என்கிற மாணவியும் பிடித்துள்ளனர். அதேபோல் தரவரிசை பட்டியலில் 6 மற்றும் 7 ஆவது இடத்தை நாமக்கல்லை சேர்ந்த மாணவர்கள் ரோகித்தும், சபரீசனும் பிடித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு………..

Leave a Reply