எப்படியாவது ஜெயிச்சுடுங்க – பாகிஸ்தான் ரசிர்கள் கதறல்

Spread the love

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், செப்டம்பர் 25 அன்று துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசும் தீர்மானம் எடுத்தது. பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 20 ஓவரில் 135/8 ரன்கள் எடுத்தது. எதிர் பேட்டிங் செய்த வங்கதேச அணி 124 ரன்களில் ஆட்டமிழந்தது, இதனால் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதி ஆட்டம் செப்டம்பர் 28 அன்று நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசியக் கோப்பை தொடர் கடந்த 41 ஆண்டுகளாக நடக்கிறது. இதுவரை 17 முறைகள் நடைபெற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில், ஒருமுறை கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேர்கொண்டுப் போட்டியிடவில்லை. இதனால் இந்த இறுதிப் போட்டிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்போது நடந்த தொடரில், பாகிஸ்தான் அணி லீக் மற்றும் சூப்பர் நான்கு சுற்று ஆட்டங்களில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த நிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லவேண்டுமென்ற உற்சாகத்தில் உள்ளது.

தற்போது, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வென்றதும், வீரர் ஹாரீஸ் ரவுக் ரசிகர்களுடன் கை கொடுத்து வாழ்த்துக்களை பகிர்ந்தார். அப்போது ஒரு பாகிஸ்தான் ரசிகர், இந்தியாவிடம் மீண்டும் தோல்வி அடையக்கூடாது என்ற எண்ணத்துடன் வீரரின் கையை பிடித்து உணர்ச்சி பெருக்கில் குமுரினார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 8 நாட்களில் இந்தியாவிடம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் மனதளவில் கடுமையாக சோர்வடைந்துள்ளனர் என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

முன்னதாக, சூப்பர் 4 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியை வெற்றியடைந்த பின்னர், இந்திய கேப்டன் சூரிய குமார் யாதவ் செய்தியாளர்களிடம், “பாகிஸ்தான் அணியெல்லாம் ஒரு எதிரியே கிடையாது” என்று கூறியதன் பின்னர் பாகிஸ்தான் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். இதனால், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லவேண்டும் என்ற உற்சாகத்தில் பாகிஸ்தான் அணியும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.