என்ன ஒரு அற்புதமான வெற்றி! – இந்திய அணிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு!

Spread the love

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி தங்கள் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில்,
என்ன ஒரு அற்புதமான வெற்றி! ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளது!
அசாதாரண ஆட்டம் காட்டிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127) மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் (89) ஆகியோருக்கு சிறப்பு பாராட்டுகள். இவர்களின் உற்சாகமும் மன உறுதியும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை ஊக்குவிக்கிறது. உலகக் கோப்பையை வென்று வாருங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவுக்கு பலரும் பதிலளித்து, இந்திய அணியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.