,

எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது -திமுக இரண்டாவது இளைஞரணி மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

mkstalin
Spread the love

எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது என திமுக இரண்டாவது இளைஞரணி மாநாட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார் .

சேலத்தில் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றுவரும் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2-வது இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டது எனக்கு 20 வயது குறைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. திமுகவின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞரணி என் தாய் வீடு, ஏனென்றால் என்னை வளர்த்து உருவாக்கியது இடம் இளைஞரணி தான். நமது தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் அழிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. தெற்கில் ஒரு விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியா முழுவதிலும் விடியல் பிறக்கும்.

அனைவருக்குள்ளும் ஓடுவது சிவப்பு ரத்தமாக இருக்கலாம். தி.மு.க தொண்டனுக்குள் ஓடுவது கருப்பு சிவப்பு ரத்தம். இந்த கருப்பு சிவப்பு ரத்தத்தின் சூடு தணியாதவரை இந்த இயக்கத்தை மட்டுமல்ல, இந்த இனத்தையும் யாராலும் வீழ்த்த முடியாது. திராவிடம் என்பது சமூகநீதி, சமதர்மம், மனிதநேயம், மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் ஆகியவை இணைந்தது. மொத்தத்தில் திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லக்கூடிய கருத்துதான். மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசிப்பது இல்லை. ஒன்றிய அரசுக்கான ஏடிஎம்களாக மாநில அரசுகளை மாற்றியுள்ளனர்” என்றார்.