அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நடிகை திவ்யதர்ஷினிக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
உங்கள் திருமணம் பற்றி?
அதில், திருமணத்தை பற்றி கூறும் போது, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். ஒரே பெண்ணைதான் பார்த்தேன்…அவரையே திருமணம் செய்துகொண்டேன்.
எப்போது பார்த்தாலும் வேலை மட்டுமே செய்துகொண்டிருந்திருக்கிறீர்களே மனைவி கோபித்து கொள்ள மாட்டார்களா ?
என் மனைவி என்னுடன் ஒத்துப்போவார். இதுவரை குடும்பத்தில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் ஏதாவது பேசி பிரச்சினையை உண்டாக்கிடாதீங்க என்று தெரிவித்தார்.
நீங்கள் பைக்கில் ஸ்டைலா போவீங்களாமே? உங்களுக்கு பைக் பிடிக்குமா என்று கேட்ட போது, ஸ்டைல் எல்லாம் கிடையாது. ராயல் என்ஃபீல்டில் போவேன்.அது எனக்கு பிடித்த பைக் என்று பதிலளித்தார்.
நீங்கள் வைத்த செடி வாடிபோனால் மிகவும் வருத்தப்படுவீர்களாமே?
செடி வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று விவசாயிக்குதான் தெரியும். அது வாடிப்போனால் வாழ்க்கை முடிஞ்சு போச்சு. என் தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் விவசாயம் செய்தார்கள். நானும் விவசாயி. இன்றைக்கும் என்னுடைய பணி, என்னுடைய தொழில் விவசாயம் தான்.
உங்களுக்கு பிடித்த படம்?இப்போது படம் பார்ப்பதில்லையா?
எம்.ஜி.ஆர் நடித்த அறக்கட்டளை. இப்போது என்ன நடக்கிறதோ… அதை அந்த காலத்திலேயே பேசியிருப்பார். இப்போது படம் பார்ப்பதில்லையா?
நான் தியேட்டருக்கு போயே 20 ஆண்டுகள் ஆகிறது என்றார்.
1974ல் நீங்கள் அதிமுகவில் வந்த போது, ஒருநாள் முதல்வர் ஆவோம் என்று நினைத்தீர்களா?
நான் எதுவுமே நினைக்கவில்லை. கிளை செயலாளராக பணியை தொடங்கினேன். இறைவன் படிபடியாக உயர்த்தியிருக்கிறார்.
அரசியல்வாதிகளை பார்த்தாலே பயப்பட வேண்டுமென நினைக்க வைத்துவிட்டார்கள்… ஒருவேளை சினிமாக்களை பார்த்து அப்படி தோன்றுகிறதா?
என்கிட்ட பேசிக்கொண்டிருக்கிறீர்கள்… பயந்துகொண்டா பேசுகிறீர்கள்.
எல்லோருமே சட்டையில் ஒரு போட்டோ வைத்திருக்கிறீர்களே? நீங்கள் எப்போது முதல்முறையாக வைத்தீர்கள்?
இந்த இயக்கத்திற்கு தலைவருக்கு பிறகு அம்மாதான் . எங்களுடைய தலைவருக்கு கொடுக்கும் மரியாதையை போல அவர் வழியில் செயல்பட வேண்டும் என்று இந்த புகைப்படமே நமக்கொரு வலிமையை கொடுக்கும்.
ஜெயலலிதா உங்களை பற்றி பேசிய வீடியோவை நீங்கள் போட்டு பார்ப்பீர்களா?
மனதிலேயே இருக்கிறது… ஏன் போட்டு பார்க்க வேண்டும்.
பழனிசாமி என்பவர் எடப்பாடியார் என்று மாறியது எப்படி?
பழனிசாமி என்றுதான் லெட்டர் பேடில் இருந்தது… அம்மாதான் எடப்பாடியார் என்று கூறினார்.



Leave a Reply