கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கோவை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள். நமது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம். சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 எனவும் ஒன்று வந்து India Court fee மற்றும் Indian non judicial. வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுதே ஒரு குழப்பம் இருந்தது. ஒன்றை நிராகரித்தால் மற்றொன்று ஏற்றுக்கொள்வார்கள். இரண்டையும் கொடுத்திருந்தோம்.
அதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆராய்ந்து ஒரு வேட்பு மனுவை எடுத்துள்ளார்கள். இது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இது அனைத்து தேர்தல்களிலும் நடக்கும் ஒன்றுதான். வேட்புமனு பரிசீலனை செய்யும்பொழுது ஒரு அரசியல் கட்சி இவ்வாறு செய்யும் இந்த முறை கோவையில் உச்சபட்சமாக நிராகரித்தே ஆக வேண்டும் என்று சொல்லி தேர்தல் நடத்தும் அதிகாரிகளே விளக்கம் தர வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதை அரசியல் கட்சிகள் புரியாமல் பேசுகிறார்கள். கமா இல்லை, புள்ளியில்லை என்று சொன்னால் கூட நிராகரிக்க வேண்டிய காரணம் அது கிடையாது. இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி எழுப்பலாம். அனைத்து விவரங்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியும். இதற்கு மேலும் ஏதேனும் விவரங்கள் தெரிய வேண்டுமென்றால் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்கலாம்” என்று பேசினார்.
Leave a Reply