,

எதிர்கட்சியினரை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம்

bjp
Spread the love

கோவை சிவானந்தா காலனியில் பாஜக கட்சியின் கோவை மாநகர் ​மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது இந்தியா கூட்டணிக்கு எதிராகவும் ராகுல் காந்திக்கு எதிராகவும் பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகரை கேலி,​ கிண்டல் செய்து அவமரியாதை செய்த இண்டியா கூட்டணி கட்சியினர் காங்கிரஸ்,திமுக, கம்யூனிஸ்ட்,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் பாராளுமன்றத்தில் சபை நேரத்தில் சபாநாயகரையும் அதே போன்று துணை ஜனாதிபதியும் அவதூறு செயலியில் ஈடுபட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ ஆர்ப்பாட்டத்தில் பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள்,மகளிர் அணியினர், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.