எடப்பாடியார் எழுச்சி சுற்றுப்பயணம் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற கோஷத்துடன் இரண்டாம் கட்டமாக கோவை மாவட்டத்தில் எழுச்சி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதனை முன்னிட்டு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை மாவட்ட தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக தெற்கு தொகுதி மாவட்ட செயலாளர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் கீழ் வசந்த ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்தனர்.

கட்சித் தொண்டர்கள் பங்கேற்பு, ஏற்பாடுகள், பொதுமக்கள் தொடர்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.