,

எடப்பாடியார் வருகை முன்னிட்டு கவுண்டம்பாளையத்தில் ஆலோசனை கூட்டம்

Spread the love

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கோவை வருகையை முன்னிட்டு, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PRG_அருண்குமார் MLA அவர்கள் கலந்து கொண்டு, நிகழ்வை முன்னெடுக்கும் விதமான ஆலோசனைகளை வழங்கினார்.

அதையடுத்து தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், பகுதி கழக செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், வட்ட கழக செயலாளர்கள்,

மாவட்ட மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்று, வரவேற்பு ஏற்பாடுகள் மற்றும் தொகுதி செயல்திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

எடப்பாடியார் வருகையை சிறப்பாகச் செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்தும், கழகத்தின் ஆய்வுகளும் இக்கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டன.