, , ,

எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன் – கோவையில் சீமான் பேட்டி

seeman
Spread the love

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார்.

அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார்.

சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான எஸ்.பி. வேலுமணியின் இல்ல வரவேற்பு விழாவில் கலந்துகொள்ளவும் வந்திருந்தார்.

இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக தாக்கம் ஏற்படுத்துமா என கேட்டபோது, “நான் ஒரு பண்பாட்டு நிகழ்வுக்கு செல்கிறேன். இது அரசியல் பேசுவதற்கான இடம் அல்ல,” என்று கூறினார்.

அவர் மேலும், “அரசியலில் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மாறலாம், ஆனால் மனித உறவுகள் மாறாது. உறவிற்காகவே நான் விழாவிற்கு செல்கிறேன்,” என்று விளக்கினார்.

கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா என கேட்கிறீர்கள், ஆனால் கொள்கை இல்லாமல் வெல்ல முடியுமா என யாரும் கேட்பதில்லை. கொள்கை இல்லாமல் கூட்டணி இருந்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையை நீங்கள் வரவேற்கிறீர்களா?” என்று பதிலளித்தார்.