,

ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த MLA பி.ஆர்.ஜி.அருண்குமார்

prg arunkumar
Spread the love

கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கவிதா. இவர் சில முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஊராட்சியில் சிறப்பு அலுவலரால் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட போது கவிதா மீண்டும் அவர்களுக்கு சாதகமானவர்களை கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால் கவிதாவை சார்ந்தவர்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறி அந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்களான சுமதி வடிவேலு, சகுந்தலா தேவி, ராஜேஸ்வரி, செல்வி ஆகியோர் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.