நீலகிரி மாவட்டம் தேயிலை, காஃபி மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து காய்கறி மற்றும் பழ மரக்கன்றுகளை கப்பல்கள் மூலம் கொண்டு வந்து, தகுந்த காலநிலைக்கு ஏற்ப நடவு செய்து பழப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பர்லியார் பண்ணையில் ‘பழங்களின் ராணி’ என அழைக்கப்படும் மங்குஸ்தான் முதல், மூலிகை மகத்துவம் கொண்ட துரியன் வரை பல்வேறு வகை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. முழுமையாக இயற்கை முறையில் பராமரிக்கப்படும் இந்த பண்ணையில் தற்போது மங்குஸ்தான் பழங்கள் பளபளப்பாக காய்த்து குலுங்குகின்றன.
உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இருவரும் இப்பழங்களை சுவைக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனை அரசு தாவரவியல் பூங்கா நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஒரு கிலோ ரூ.300க்கு விற்கப்படும் மங்குஸ்தான் பழங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.



Leave a Reply