கோடை காலத்தில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரமான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள் ளது.
இதையடுத்து, கோவை மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனியில் அமைந்துள்ள புதிய பஸ்நிலையத்திலிருந்து தினசரி இயங்கும் பஸ்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இன்றுவரை தினமும் சுமார் 60 முதல் 65 அரசு பஸ்கள் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றன. தற்போது சுற்றுலா பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, கோவை மண்டல அரசு போக்குவரத்துக் கழகம் 20 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, கோவை போக்குவரத்துக் கழகத்தின் ஒரு உயரதிகாரி கூறுகையில், “கோவையில் இருந்து ஊட்டிக்கான வழக்கமான சேவைகளுடன் இணைந்து, தற்போது மேலும் 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணச் சந்தை தேவையைப் பொருத்து, எதிர்காலத்தில் மேலும் பஸ்களை இயக்குவது பற்றியும் பரிசீலனை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
ஊட்டிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கோவையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

Leave a Reply