திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே, நகரின் முக்கிய அடையாளமாக விளங்கும் இரண்டு அடுக்கு மேம்பாலத்திற்கு அடியில், மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சாலைகுமாரர் சாலைப் பகுதியிலும் ஆங்காங்கே கடைகள் அமைத்தும், வாகனங்களை நிறுத்தியும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். சுகாதாரச் சீர்கேடும், போக்குவரத்து நெரிசலும் திருநெல்வேலி சுகாதாரமான நகரம்தானா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு: மத்திய அரசு “அம்ரித் பாரத்” திட்டத்தின் கீழ் ரயில்வே நிலையங்களின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நிதி ஒதுக்கி வருகிறது. இதனால், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் உள்ளே கிளீனாக உள்ளது. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சுற்றுவட்டாரத்தில் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தக் குப்பைக் குவியலால் மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, துர்நாற்றம் வீசும் பகுதிகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளே அழகு; வெளியே கழிவு… நெல்லை ரயில் நிலையத்தின் அவலம்



Leave a Reply