, , ,

உலக பார்வையற்றோர் தினம் – மத்திய அமைச்சர் விரேந்தர குமார் பங்கேறபு

உலக பார்வையற்றோர் தினம்
Spread the love

மதுரை வில்லாபுரம் மனவளர் வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மையத்தில், உலக பார்வையற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
மத்திய சமூக நீதி அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் விரைந்தர குமார்,மத்திய இணை செயலாளர் ராஜுவ் சர்மா, தேசிய இயக்குநர் நச்சி கோடா ரவுட் பங்கேற்றனர்.
தமிழில் பேசிய ஓஎன்சிசி அதிகாரியிடம் சர்ச்சை ஏற்படும் வகையில் ஹிந்தியில் பேச கூறியதும் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முத்தாய்ப்
பாய் பேசிய ஓஎன்ஜிசி அதிகாரி மாறன் .ஒ.என்.ஜி.சி நிறுவன நிதி பங்களிப்பில் ரூபாய் 26 லட்ச மதிப்பில் 124 பயனாளிகளுக்கு அதிநவீன கருவிகள் வழங்கப்பட்டது.
கடந்த 2023லிருந்து பயன்பாட்டில் இருந்த மாற்றுத்திறனாளிகள் கட்டிடத்தை 2025ல் திறந்து வைத்த ஒன்றிய அமைச்சர்.மத்திய அரசின் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் கடந்த 2023 டிசம்பர் முதல் இயங்கி வருகிறது.ஏற்கனவே, இயங்கி வந்த கட்டிடத்தை ஒன்றிய அமைச்சர் வீரேந்திரகுமார் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஒ என்ஜிசி நிறுவனம் மூலம் சுமார் 26 லட்ச ரூபாய் மதிப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு அதி நவீன உபகரணங்கள், எதிரில் வரும் தடைகள் உணரும் வகையில் அதிர்வு அலை கைபிடி, நவீன செல்போன் மூலம் கண் கண்ணாடியில் உணரும் வகை ,ஏ.ஒன். தொழில்நுட்பம். பார்வையற்றவர்கள் படிக்கும் வகையில் நவீன மேஜை விளக்கு ஆகியவை பார்வையற்றோருக்கு மத்திய அமைச்சர் விரேந்திர குமார் வழங்கினார். இந்நிலையில்
இன்று நடைபெற்ற விழாவில், ஒன்றிய அமைச்சர் விரேந்திரா குமார், மத்திய இணை செயலாளர் ராஜிவ் சர்மா, தேசிய இயக்குநர் நச்சி கோடா ரவுட்,
(onac)எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் குழும பொது மேலாளர் மாறன், பொது மேலாளர் அறிவழகன், தென்மண்டல சி.ஆர் சி, இயக்குநர் ஜெயசிலி புளோரா, மற்றும் மதுரை மைய இயக்குநர் நடேஸ் நித்தியானந்தா, பயிற்சியாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்னை மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் சார்பில் நிதி பங்களிப்பு மூலம் இந்த விழா நடைபெற்றது. விழாவில், கலந்து கொண்ட ஓஎன்சிசி நிறுவன பொது மேலாளர் மாறன் மத்திய அமைச்சர் வீரேந்திர குமாருக்கு நினைவு பரிசினை வழங்கி ஓஎன்ஜிசி யின் பங்களிப்பு குறித்து முதலில் தமிழில் பேசினார்.
மாறன் தமிழில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, மத்திய செயலாளர் ராஜீவ் சர்மா ஹிந்தியில் பேச வேறொருவரை அழைத்தார். அப்பொழுது தான் இந்தி மற்றும் ஆங்கிலம் அனைத்து மொழியிலும் பேசுவேன் எனக் கூறி அமைச்சர் முன்னிலையில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகளிலும் முத்தாய்ப்
பாய் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
விழா மேடையில், மத்திய அமைச்சர் முன்னிலையில் மத்திய இணை செயலாளர் ஹிந்தியில் பேச சொன்னது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
உலக பார்வையற்றோர் தின விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சரை வரவேற்க பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், செய்தி தொடர்பாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.