அப்போது பேசிய அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை செல்ல உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவு பிரச்னை தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் அண்ணாமலை வாங்கி உள்ளார். தேர்தல் பத்திரம் முறைகேடு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தான் வெளிவந்தது. இந்த தகவலை பெற பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், அண்ணாமலை கச்சத்தீவு குறித்து உடனடியாக தகவல்களை கேட்டு வாங்கி உள்ளார். இது அரசியலுக்காகவும், வாக்குகள் பெறவும் கச்சத்தீவு பிரச்சினை கொண்டு வந்துள்ளனர்.
மீனவர்கள் மீது உள்ள அக்கறையில் செய்யவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக 21 முறை ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளேன் என கூறி இருக்கிறார். நூறு மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக, மீனவர்கள் மற்றும் தனிநபர் ஒருவர் அளித்த என 4 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாஜ அரசு பத்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்வு அளிக்க வேண்டும். பதில் மனு அளிக்க கூடாது.
2011 ஆம் ஆண்டு உலககோப்பையில் இந்தியா கிரிக்கெட்டில் இலங்கையை வென்றது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக விக்டர், அந்தோணி தாஸ் , ஜான்பால், மாரிமுத்து உள்ளிட்ட நான்கு மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக, இலங்கை கடற்படை, துன்புறுத்தி கொன்றது. அவர்களின் உடல் கரை ஒதுங்கியது. இதுவரை 147 எப் ஐ ஆர் இலங்கை கடற்படை மீது போடப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நடவடிக்கையையும் இந்திய அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.



Leave a Reply