நமக்கு சோறு தான் முக்கியம். அதிலும் சொந்த ஊரின் உணவு பதார்த்தங்களுக்கு ஈடு இணை இல்லை. எந்த ஊருக்கு சென்றாலும், இல்லை வெளிநாடுகளுக்கு சென்றாலும் சொந்த ஊரில் கிடைக்கும் உணவு வகைகளுக்கு ஏங்குவது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு நகரத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு அடையாளமாக உணவுகள் கருதப்படுகிறது.
உதாரணமாக நமது தமிழ்நாட்டில் மதுரையை எடுத்துக் கொண்டால் பரோட்டா, இட்லி, கோவையை எடுத்துக் கொண்டால் அரிசி பருப்பு சாதம், சென்னையில் பிரியாணி, இட்லி, தோசை இப்படி ஒவ்வொரு நகரத்திலும் சில உணவுகள் பாப்புலர். அந்த வகையில், உலகின் மிகச்சிறந்த உணவு எந்த நாட்டை சேர்ந்தவை என்கிற பட்டியலை டேஸ்ட் அட்லஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் கிரீக் உணவு வகைகள் உலகளவில் முதலிடத்தை பெற்றுள்ளன.
இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுகல்,துருக்கி, இந்தோனேஷியா,பிரான்ஸ் நாட்டு உணவு வகைகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இந்திய உணவு வகைகளுக்கு உலகளவில் 12வது இடம் கிடைத்துள்ளது. இதில், பஞ்சாபி உணவு வகைகள் மிசச்சிறந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் சிறந்த உணவுகள் கிடைக்கும் முதல் நான்கு நகரங்கள் இத்தாலியில் உள்ளன. நமது மும்பைக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. இங்கு மதுங்கா கிங் சர்க்கிளிலுள்ள கஃபே மெட்ராஸ் போன்ற ஹோட்டல்கள் மிகச்சிறந்தவை என்றும் டேஸ்ட் அட்லஸ் கூறியுள்ளது. உலகளவில் மிககச்சிறந்த உணவுகள் கிடைக்கும் முதல் 100 நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 75வது இடம் கிடைத்துள்ளது. சென்னை உணவுவகைகளில் இட்லி, தோசை, ருமாலி ரொட்டி, சிக்கன் 65, சாம்பார் ஆகியவை முக்கியமானது என்று டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் சிறந்த உணவகங்கள் பட்டியலில் அன்னலட்சுமிக்கு முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளது. பெஷாவரி, பாம்பே லஸ்ஸி, ஸ்ரீ மித்தாய், ராயர் மெஸ் போன்ற உணவகங்களும் சிறந்தவை என்று டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த உணவகங்கள் பட்டியல்: அன்னலட்சுமி, ராயர் மெஸ்சுக்கு முக்கிய இடம்…

Leave a Reply