முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் (X) தளம் இன்று உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. இதுகுறித்து நிறுவனம் எந்த விளக்கமும் இதுவரை வெளியிடவில்லை.
இந்தியாவில் இன்று (நவம்பர் 18) மாலை 5.15 மணி அளவில் தளம் செயலிழந்தது. அதன் பிறகு பயனாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழையவும், வெளியேறவும், பதிவுகளைப் பார்க்கவும் முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தளம் முழுவதும் முடங்கியிருப்பதால் பயனாளர்கள் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சேவை ஏன் முடங்கியது என்ற காரணம் பற்றி எக்ஸ் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.



Leave a Reply