தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்வு இனிதே துவங்கியது. டாக்டர் என்.ஜி.பி.கல்விக் குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி இவ்விழாவிற்குத் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். மேலும் அவர் ”சிற்பியின் பாரதி கைதி எண் 253” என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை நூலை வெளியிட்டார்.
இவ்விழாவில் முனைவர் ப.மருதநாயகம் தமிழ் மொழியின் சிறப்புக் குறித்தும் ”சிற்பியின் பாரதி கைதி எண் 253” என்ற நூலின் சிறப்புப் பற்றியும் உரையாற்றினார். இவ்விழாவில், உ.வே.சா.தமிழறிஞர் விருது முனைவர் பா.ரா.சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டது. பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது. சிறப்பு விருதுகள் முனைவர் சு.சண்முகசுந்தரம், முனைவர் ஆ.மணி, எழுத்தாளர் க.அம்சப்ரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா.முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.
Leave a Reply