13வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெருமையும் மகிழ்ச்சியும் நிலவுகிறது.
மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பையை கைப்பற்றியது. இது இந்திய மகளிர் அணிக்கு வரலாற்றில் முதல் உலகக் கோப்பை வெற்றியாகும்.
இந்த வெற்றிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டதாவது:
“இந்தியாவிற்கு என்ன ஒரு சிறப்பான தருணம்! இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் தங்களின் தைரியம் மற்றும் சக்தியால் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் பயமின்றி, உறுதியுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து பதிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



Leave a Reply