கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மைப் பணியாளர்கள் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் அதிர்ச்சி சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு விதிமுறைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக, அவர்களின் உயிரை அச்சுறுத்தும் சூழலில் பணிபுரிய வைக்கப்படுவதை சமூக அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.
அரசு விதிப்படி, பாதாள சாக்கடைப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஹெல்மெட், முகக் கவசம், கையுறை, காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பணிக்கு செலுத்தப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் நேரடியாக சாக்கடைக்குள் இறங்கியுள்ளனர். இது தொழிலாளர் நலனையும், மனித உரிமைகளையும் புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நாசமான நிலைமையை பார்த்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், தன் வாகனத்தை நிறுத்தி நேரில் பணியாளர்களிடம் சென்று அவர்களை அறிவுறுத்தினார். பாதுகாப்பு இல்லாமல் பணியில் ஈடுபடக் கூடாது என கூறிய அவர், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். “நீங்கள் வாழவேண்டும்; நாடும் நலமடைய வேண்டும்” என்ற அவரது வார்த்தைகள், தூய்மைப் பணியாளர்களின் நிலையைப் பிரதிபலிக்கின்றன.
மாநகராட்சி மக்கள் மீது வரி சுமையை சுமத்துவதில் மட்டும் கவனம் செலுத்துவதாகவும், அடிப்படை பாதுகாப்பு கூட வழங்க முடியாத நிலையில்தான் கோவை நகரம் இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தூய்மைப் பணியாளர்களின் உயிர் பாதுகாப்பை உரிய முறையில் காப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றதே அனைவரின் வலியுறுத்தல்
Leave a Reply