உசிலம்பட்டியில் கடைகள் இடிக்கும் பணி

Spread the love

உசிலம்பட்டி பேருந்து நிலையம் 8 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்கத்திற்காக பணிக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்ற சூழலில் ,
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க பணிக்காக அரசு நிதி ஒதுக்கிய 8 கோடி போதாது என்றும் மேலும் 8 கோடிக்கான திட்ட மதிப்பீட்டை உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் அனுப்பி உள்ள சூழலில் பேருந்து நிலையம் மற்றும் வணிக கடைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ள சூழ்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சந்தை பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை இடிக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இடிக்கப்பட்ட கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.