மக்கள் குறைகளை நேரில் கேட்டு, தீர்வு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் ஒரு மாபெரும் மக்கள் நல திட்டமாக திகழ்கிறது என்று பல்சமய நல்லுறவு இயக்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம், மாநிலத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளை சிறந்த முறையில், விரைவாக தீர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நல எண்ணம் மற்றும் செயல்பாடுகளை பாராட்டிய இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, “முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலேயே இத்தகைய திட்டங்கள் சாத்தியமாகின்றன. மக்கள் மனதில் நேரடியாக இடம் பிடிக்கும் இந்த திட்டம், தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்” என்று கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முன்னேறி வருவதைக் குறிப்பிட்டு, திராவிட மாதிரியின் ஒளியினை மேலும் பரப்பும் வகையில் செயல்பட, தங்கள் இயக்கம் உறுதி அளிக்கின்றது என்றும் தெரிவித்தனர்.
வாழ்க திராவிடம்! வளர்க தமிழ்நாடு!
Leave a Reply