கூலி படத்தை ப்ளூ சட்டை மாறனும், இட் இஸ் பிரசாந்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்க வேண்டிய அளவுக்கு கூலி படம் இல்லை. ஒருமுறை பார்க்க கூடிய படம்தான் கூலி படம் என்று பேட்டி கொடுத்து வந்த தயாரிப்பாளர் தனஞ்செயன், கடந்த 4 நாட்களாக மாறன், பிரசாந்தை விட கடுமையாக கூலி படத்தை சாடி வருகிறார்.இதற்கு ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ. ரியாஸ் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், மாறனும், பிரசாந்தும் வியூவ்ஸ்க்காக விளம்பரத்திற்காக விமர்சனம் செய்கிறார்கள். அதை கடந்துவிடலாம்.திரைத்துறையில் பல பொறுப்புகளில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தனஞ்செயன் இப்படிச் செய்யலாமா? மிஸ்டர் தனஞ்செயன்… கூலிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க படத்தை வாங்கிய விநியோகஸ்தரா? இல்லை, படத்தில் பணிபுரிந்து சம்பளத்தொகை நிலுவையில் உள்ளதா? இல்லை, தியேட்டரின் உரிமையாளரா? உங்கள் தியேட்டரில் கூலி திரையிட்டிருக்கீர்களா? என்னதான் உங்களுக்கு பிரச்சனை? ஏன் இப்படி கூலிக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு பேட்டி கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? சன் பிக்சர்ஸ் ஓனர் நீங்களா? கலாநிதிமாறனா? அவருக்கே தெரியாத டேட்டாவை எல்லாம் நீங்க கொடுத்துக் கொண்டிருக்கிறீர்களே? சினிமாவில் முக்கிய பொறுப்பில் இருந்துகொண்டே இப்படி எல்லாம் செய்வதற்கு உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லை? காசு கொடுத்து படம் பார்ப்போருக்கும் அதை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. கூலி படத்தைப் பற்றி இப்படி நெகட்டிவாக பேச யாரிடமாவது வெயிட்டா பணம் வாங்கி இருக்கிறீர்களா? கூலி படத்தை பற்றி நெகட்டிவாக நாலு நாட்கள் கங்கனம் கட்டிக்கொண்டு பேசி வருகிறீர்களே ஏன்? நீங்கள் வெறும் விமர்சகரா இருந்தால் உங்களை கேள்வி கேட்க மாட்டோம். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படி எல்லாம் பேசலாமா? உங்களுக்கு பொறுப்பு வேண்டாமா?மற்ற விமர்சகர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம். அவர்கள் எதிரி என்றால் நீங்கள் துரோகி. இது சினிமாவில் ரஜினியோட 50ஆம் ஆண்டு. எல்லோரும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படி ஒரு விசத்தை சூசகமாக பரப்பிக்கொண்டு வருகிறீர்களே. இது உங்களுக்கு தேவையா? கூலி படம் பின்னடைவு என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அப்படியே பின்னடைவு ஏற்பட்டால் உங்களுக்கு என்ன பிரச்சனை? இல்லை, யாரை சந்தோசப்படுத்த இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இது நல்லதுக்கு இல்ல, அவ்வளவுதான் சொல்வேன். தயவு செய்து சொல்கிறேன். இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். தொடந்து பேசினால் நானும் தொடர்ந்து பேச வேண்டிய நிலைமை வரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply