நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில் இ-ஃபைலிங் முறையை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர், நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், கண்டன பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் நிலையம் சென்றனர். அங்கு, இ-ஃபைலிங் முறையை வாபஸ் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர்.



Leave a Reply