, , ,

இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி

spadex
Spread the love

விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில்  விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள்  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கின்றனர் . 2 விண்கலன்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில் நுட்பத்தை அறிந்த 4வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *