சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான டிங் லிரனை தோற்கடித்து, 18 வயதில், இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் இளைய உலக செஸ் சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் குகேஷ் ஆவார். இதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.குகேஷ் மற்றும் டிங் ஆகியோர் 14வது மற்றும் கடைசி ஆட்டத்தில் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்ததால், போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.கறுப்புக் காய்களுடன் விளையாடிய குகேஷ், 53வது நகர்வில் டிங்கின் முக்கியமான பிழையைப் பயன்படுத்திக் கொண்டார்.
Leave a Reply