புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சைபெற்று வந்த இளையராஜாவின் மகள் பவதாரணி (47) காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி திரை பின்னணி பாடகியாவார். இவர் ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர். தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. .நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
Leave a Reply