, , , ,

இளம் வீரருடன் தோளுடன் தோள் மோதல்: ‘கோமாளி கோலி’ என ஆஸ்திரேலிய பத்திரிகை விமர்சனம்

viratkohli
Spread the love

ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்தத் தொடரின் பில்டப்புக்காக பல ஆஸ்திரேலிய மீடியாக்கள்  கோலியைப் பற்றி புகழ்ந்து கட்டுரைகள் வெளியிட்டன. ஆனால், தொடர் தொடங்கி நடக்க தொடங்கியதும் நிலைமை தலைகீழாக மாறியது. விமான நிலையத்தில் தன்னுடைய குழந்தைகளை அனுமதியின்றி படம் பிடித்ததற்காக கோலி ஆஸ்திரேலிய மீடியாக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை, ஆஸ்திரேலிய மீடியாக்கள் பெரிதுப்படுத்தியிருந்தன.  பத்திரிகையாளர் சந்திப்பில் ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஒன்றாகக் கூடி இந்திய அணியை விமர்சித்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்  பும்ராவை மித வேகப்பந்துவீச்சாளர் என குறிப்பிட்டு கேள்வி அவமானப்படுத்தினர்.

இந்நிலையில்தான் இப்போது ‘கோமாளி கோலி’ என தலைப்பிட்டு ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறது. மெல்பர்ன் டெஸ்ட்டின் போது, ஆஸ்திரேலிய அணிக்காக சாம் கான்ஸ்டஸ் என்ற இளம் வீரர் அறிமுகமாகியிருந்தார். அவர் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது கோலி வேண்டுமென்றே அவரிடம் சென்று தோளோடு தோளாக மோதினார். இதில் பலருமே கோலியை விமர்சித்தனர். ஐ.சி.சியும் கோலியின் போட்டி ஊதியத்தில் 20% அபராதமாக விதித்தது. இதை குறிப்பிட்டு தி வெஸ்டர் ஆஸ்திரேலியன் என்ற பத்திரிகை  கோமாளி கோலி ( Clown Kohli) என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும், அதில் கோலியை ‘கோழை’ எனக் குறிப்பிடும் வகையிலான சொற்களும் இடம்பெற்றிருக்கிறது. அந்த செய்தித்தாளின் தலைப்பு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.