,

இருள் மறைந்து, ஒளி பொங்கட்டும் – நா.கார்த்திக் பொங்கல் வாழ்த்து

n karthik
Spread the love

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,
“திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் நடைபெற்று‌ வரும், “எல்லோருக்கும் எல்லாம்” எனும் திராவிட மாடல்‌ பொற்கால‌ ஆட்சியில்,
தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம், கல்லூரிப் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1,000 வழங்கும் “புதுமைப் பெண் திட்டம்.”, “மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்துப் பயணம்”, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி, 1.5 இலட்சம் விவசாயிகளுக்கு, விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டம்., பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்., மக்களைத் தேடி மருத்துவம் எனும் திட்டம்., நம்மைக் காக்கும் 48 மருத்துவத் திட்டம்,  மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைத் திட்டம் உள்ளிட்ட,  “எல்லோருக்கும் எல்லாம்” எனும் கூற்றுப்படி, ஏராளமான திட்டங்களைச் சீராகச் செயல்படுத்தி வரும் திராவிட மாடல் அரசின் நாயகன், மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் வாழ்த்துகளுடன்
புத்தாடை அணிந்து புதுவண்ணக் கோலமிட்டு புதுமையை வரவேற்று, பழைமைக்கு விடைகொடுத்து, உணவளிக்கும் உழவுக்கும், உழவருக்கும் நன்றி கூற உவகையுடன் உழைக்கும் எருதுகளும் உய்வு பெற செங்கரும்புடன் செங்கதிரும் சேர்ந்து கொண்டு மஞ்சளின் குணமும் மலர்களின் மணமும் கமழ்ந்து நிற்க… அன்பான உற்றாரும் அருமை நட்பூக்களும் மலர்ந்து நிற்க இயற்கையைப் போற்றவும் *இன்னுலகு காக்கவும் தைத் திருநாளாம் தமிழர் திருநாளில் சாதி, மத பேதங்களைக் களைத்து,
உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லாமல் எல்லோரும் ஓர் இனமாய் அழகிய புதுப்பானையில் ஆழாக்கு அரிசியிட்டு, சமத்துவப் பொங்கல் பொங்கி வரும் வேளையில் வாழ்த்திடுவோம் !
வறுமை நீங்கி, செல்வம் பொங்கட்டும்..! வறட்சி நீங்கி, செழிப்பு பொங்கட்டும்..! இருள் மறைந்து, ஒளி பொங்கட்டும்..! சமத்துவப் பொங்கலோ பொங்கல்!
அனைவருக்கும் “தைத்திருநாளாம்” இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! “தமிழர் திருநாளாம்” சமத்துவப் பொங்கல் வாழ்த்துகள்!” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்