இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

Spread the love

அ.தி.மு.க.வில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள உள்கட்சி சர்ச்சை மேலும் தீவிரமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்தித்ததையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கியிருந்தார்.

இந்நிலையில், செங்கோட்டையன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விவகாரம் விரைந்து விசாரிக்கப்பட வேண்டும். தற்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் உள்ள அமைப்பு உண்மையான அ.தி.மு.க. அல்ல. உண்மை நிலையை நிரூபிக்க எனக்குத் தேவையான அவகாசம் வழங்க வேண்டும்,” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் அ.தி.மு.க. உள்கட்சிக் கலகத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.