மாதா அம்ருதானந்தமயி தேவி 24-வது பிரம்மஸ்தான மஹோத்ஸவத்தை முன்னிட்டு, நல்லாம் பாளையத்தில் அமைந்துள்ள அம்ருத வித்யாலயத்தில், ஊக்கமளிக்கும் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
அவரது அருளுரையில் இயற்கை ஒரு சக்திவாய்ந்த சக்தி ஆகும். அது காப்பதைப் போலவே அழிக்கும் தன்மையும் கொண்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே, இயற்கை அன்னையிடம் பணிவுடன் தலை வணங்கக் கற்றுக்கொள்வோம். இயற்கையை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தக் கற்றுக்கொள்வோம்” என்றார்
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி கே அருணாசலம்், காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஷ்வர ஸ்வாமி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார்், முன்னாள் கவுன்சிலர் வெண்தாமரை பாலு ஆகியோர் கலந்து கொண்டு மாதா அம்ருதானந்தமயிக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து அம்மாவின் வழிகாட்டுதலின் படி தியானம் மற்றும் பஜனைகள் நடைபெற்றது.
இவ்விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் அம்மாவின் அருளுரை, பஜனை, தியானம் மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இயற்கையை பணிவு மற்றும் பக்தியுடன் பேணிக் காப்போம் கோவையில் மாதா அம்ருதானந்தமயி தேவி அருளுரை

Leave a Reply