தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர்.
நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
“என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம்! மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பின்பற்றி, மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் என் அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கெல்லாம் எனது மனமார்ந்த நன்றி!”
Leave a Reply