விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வெங்கட் பிரபு இயக்கும் விஜய்யின் 68-வது படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், விஜய்யின் 68-வது படத்தின் பெயர் கோட் (G.O.A.T. – Greatest Of All Times) என்று தகவல் பரவி வருகிறது.சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.



Leave a Reply