மத்திய அரசின் புதிய குற்றவியல் திருத்த்த சட்டங்கள் இன்று (ஜூலை 1 ) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்த பழைய சட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. இந்த சட்டங்களில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக பழைய சட்டங்களில், குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மட்டும் தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய முடியும். ஆனால், இன்று அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்கள் மூலம் எந்த காவல் நிலையத்திலும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யலாம். இது ஜீரோ எஃப்ஐஆர் என்று சொல்லப்படுகிறது.

Leave a Reply