இந்திய பேட்மிண்டன் அணி கேப்டனாக செயல்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு

Spread the love

சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுகள் சம்மேளம் சார்பில், உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்-2025 ஜெர்மனி நாட்டில் உள்ள ரைன் ரூர், பெர்லின் உள்ளிட்ட நகரங்களில் அண் மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் 113 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
இந்திய பேட்மிண்டன் அணிக்கு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் கருணாகரன் கேப்டனாகச் செயல்பட்டார்.
இப்போட்டியில் இந்திய அணி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றது.
உலக பல்கலைக்கழக பேட் மிண்டன் போட்டியில், இந்திய பேட்மிண்டன் அணி பதக்கம் வென்று சாதனைப் படைத்தது இதுவே முதல்முறையாகும்.
உலக பல்கலைக்கழகப் பேட்மிண்டன் போ ட்டியில், கேப்டனாகச் செயல்பட்டு, வெண் கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைச் சேர்த்த மாணவர் சதீஷ்குமார் கருணாகரனை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் பாராட்டி வாழ்த்தினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.