இந்திய பவுலர் செய்த சாதனை..! அசத்திய ஜஸ்பிரீத் பும்ரா

Spread the love

அந்நிய மண்ணில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற கபில்தேவின் சாதனையை பும்ரா சமன் செய்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பன்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் விளாசினர்.

இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியபோது, இந்திய வீரர்களின் அசத்தலான பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களில் ஆல் அவுட் ஆனது.