,

இந்தியாவிலேயே இரும்பால் ஆன ஒரே சனிபகவான் சிலைக்கு சனிப்பெயர்ச்சி பூஜை

sanipeyarchi
Spread the love

கோவை  புலியகுளம் மாரியம்மன் திருக்கோவிலில் தனி சன்னதியாக வீற்று அருள் பலிக்கும் ஸ்ரீலோக நாயகர் சனீஸ்வர பகவான் சன்னதியில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது

கோவை புலியகுளத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாரியம்மன் திருக்கோவில் உள்ளது, இங்கு ஆன்மீக பக்தர்கள் சார்பாக கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்ரான, திருவடி ராஜேந்திரன் இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை சென்ற போது, அங்கே, ஸ்ரீ நாராயண கிரி சுவாமியை கண்டு தரிசனம் செய்தவருக்கு, அவரின் அருள் ஆசியால் , இங்கே சனி பகவானுக்கு தனி சன்னதி எழுப்பியதாக தெரிவித்தனர்

இமயமலை ,ஸ்ரீநாராயண கிரி சுவாமிகள் கொடுத்த மூல பொருளை கொண்டு, பத்ம புராணத்தில் கூறிய படி உலோகத்தில் சனி பகவானுக்கு இஷ்டமான இரும்பால், கும்பகோணம் ராமசந்திர சபதியின் ஆலோசனையால் கோவை இரும்பு உருக்காலையில் உருவானவர் தான் ஸ்ரீலோக நாயகர் சனீஸ்வர பகவான்,

இச்சிலை உருவம் ஏழு அரை அடியில் 1300 கிலோவில், உருவாகி பீடம் மூன்று அடியில் 1100 கிலோ இரும்பை உருக்கி, சனிபகவான் வாகனத்தை மூன்றை அடி நீளத்தில் 700 கிலோ இரும்பில் உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்,

இந்தியாவில் இரும்பு உலோகத்தால் உருவான, பிரசித்தி பெற்ற ஸ்ரீலோக நாயகர் சனீஸ்வர பகவான் ,தனி சன்னதியாக, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாகவும், சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருவதாக கூறினார்கள்,

ஸ்ரீலோக நாயகர் சனீஸ்வர பகவான் சன்னதியில், டிசம்பர் 20ம்தேதி  சனி பகவான் பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. சனி பகவான் பெயர்ச்சி விழாவின் ஒரு பகுதியாக யாக சாலை அமைக்க பட்டு யாக பூஜை, கணபதி பூஜை, கோமாதா பூஜை, அஷ்டலக்ஷ்மி பூஜை,யுடன் பூர்ணாகுதி நடந்தது.