இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரேசிங் ஃபியுயல் ஆசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் 2024 உடன் இணைந்து எழுச்சி ஊட்டுகிறது. 2024 முதல் 2026 வரை நடைபெறும் ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப்பி-ன் அஃபீஸியல் ஃபீயல் பார்ட்னராக இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்துள்ளது.
ஸ்ட்ராம் அல்டிமேட் ரேஸிங் ஃபீல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ஸ்ட் ராம்” எரிபொருளானது, ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப்பின் எல்லா போட்டிகளிலும் இணைந்திருக்கும். குஜராத் ரிபைனரியில் இந்த எரிபொருள் நவீன தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் புகழ் பெறும் இந்த எரிபொருள் ‘மேக் இன் இந்தியா’ முனைப்புக்கு பெருமை சேர்ப்பதாகும்.
இது சுவிட்சர்லாந்தின், எப். ஐ. எம் அங்கீகாரம் பெற்ற இன்டர் டெக் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். கடுமையான சர்வதேச தர நிர்ணய அளவுகோல்களில் தேர்வானதாகும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மகாதேவ் வைத்யா இதுகுறித்து பேசும்போது, “ஆசிய அளவிலான ‘ஏ ஆர் ஆர் சி’ மோட்டார் ஸ்போர்ட்ஸ் உடன் எங்களது அதிநவீன எரிபொருள் ‘ஸ்ட் ராம்’ இணைந்திருப்பது எங்களது அசுர வளர்ச்சி முன்னேற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். சர்வதேச அளவில் மிகவும் விசேஷமான, புது மையான எரிபொருள் உற்பத்தியில், சர்வதேச அளவில் அடியெடுத்து வைப்பது ‘மேக் இன் இந்தியா ‘கருத்தாக்கத்துக்கு மேலும் வலு சேர்க்கும். ஃ எண்டியூரோ, ட்ரையல், சர்க்யூட் ரேசிங், மோட்டோ கிராஸ், சூப்பர் மோட்டோ, கிராஸ் கன்ட்ரி, இ-பைக், மற்றும் ட்ராக் ரேசிங் என அனைத்து வகை பந்தயங்களுக்கும், போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வகையான பைக்குகளுக்கும் இந்த ‘ஸ்ட் ராம்’ எரிபொருள் ஏற்றதாகும். உயர்திறன் கேஸ்ஸோ லைன் வகையில் தனித்துவ தயாரிப்பாக இது உள்ளது. விசேஷ அடர்த்தி, டிஸ்டிலேஷன் ரேஞ்ச், வேப்பர் பிரஷர், ஒலி பின் இவற்றால் ரேசிங் களில் முதன்மை பெறு கிறது.
இன்ஜின்களின் ஆயுளை நீட்டிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுக் கேட்டையும் தவிர்க்கிறது. தாய்லாந்தில் மார்ச் 15 முதல் 17 வரை நடக்கும் முதல் பந்தயத்துக்கு ‘ஸ்ட்ராம்’ எரிபொருளை கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி மும்பை துறைமுகத்திலிருந்து இந்தியன் ஆயில் நிறுவனம் கப்பலேற்றியது. கடந்தாண்டு மோட்டோ ஜி பி பாரத் பந்தயத்திலும் இணைந்திருந்தது. பிரீமியம் எரிபொருள் மற்றும் லுப்ரிகன்ட் விற்பனையில் பல்வேறு நாடுகளில் சந்தையில் முன்னணி வைக்கிறது. இதனாலேயே மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளில் நம்பத் தகுந்த பங்குதாரராகத் திகழ்கிறது.
Leave a Reply