‘இட்லி கடை’ பீவர்: தனுஷ் கதாபாத்திரம் போல் ஹாலுக்கு வந்த தீவிர ரசிகர்

Spread the love

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவையிலும் பல்வேறு திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் கூட்டமாக திரண்டனர். ஒரே மாதிரி இட்லி கடை புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்த ரசிகர்கள் உற்சாகக் கோஷங்களுடன் படத்தை ரசித்தனர்.

இந்நிலையில், ஷியாம் என்ற தீவிர தனுஷ் ரசிகர், படத்தில் நடிகர் தனுஷ் எடுத்துக்கொண்ட வேடத்தைப் போலவே வேஷ்டி, சட்டை, துண்டு அணிந்து நெற்றியில் திருநீறு பூசி திரையரங்குக்குள் வந்தார். அவரின் இந்த ரசிகர் பாங்கு மற்ற ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.