கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பர்னிஷிங் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட பணியாளர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் சுதாரித்துக் கொண்டு வெளியேறியதால் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து ஆர்.எஸ் புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்கள், கணினி சம்பந்தமான மின் சாதன பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.
Leave a Reply