தீபாவளியையொட்டி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ள தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்.20-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முந்தைய 2 நாட்களும் வார இறுதி விடுமுறை என்பதால், அக்.17-ம் தேதியே ஊர்களுக்குச் செல்ல வெளியூர்வாசிகள் ஆயத்தமாகி வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கட்டணத்தை கட்டுக்குள் வைக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்கவும், கோவை-சென்னை, கோவை-மார்த்தாண்டாம், பாண்டிச்சேரி, பெங்களூரு கோவையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகைக்காக 4 மடங்குக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு எவ்வளவு கட்டணம் என்று நிர்ணயிக்காததால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும்போது, எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என்பது கேள்ளிக்குறியாக உள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை என்று கூறுகிறார். ஆனால் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக கிலோமீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணகிக்க வேண்டும் என்று கன்சுமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா.லோகு தெரிவித்தார்.
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி: நடவடிக்கை எடுக்குமா அரசு



Leave a Reply